வைத்தியசாலையிலிருந்து காணாமல் போன தந்தை - மகன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

hospital missing father
By Sumithiran Sep 12, 2021 04:41 PM GMT
Report

காணாமல் போன தனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என பொலிஸ் சாஜன்டின் மகன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சாஜன்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் சுகயீனம் காரணமாக கடந்த 08 ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளர்.

இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதும் இதுவரையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டவில்லை எனவும் நான்கு நாட்களாக தேடப்பட்டு வரும் தனது தந்தையை மீட்டுத்தாருங்கள் எனவும் மூத்த மகனான இளங்கோவன் அபிநாத் தெரிவித்தார்.

நோட்டன் ஒஸ் போன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் தலவாக்கலை பூண்டுலோயாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது மனைவி ஆசிரியை ஆவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய செல்லையா இளங்கோவன் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சாஜன்டாக கடமையாற்றிவரும் சிறந்த கரப்பந்தாட்ட வீரராவார்.

33 வருடம் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் மலையக அரசியல்வாதிகளின் பாதுகாவலராகவும் கடமையாற்றியவராவார் இவர் கடந்த மாதம் 10 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து இவர் உட்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேற்கொண்ட பிசி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 07 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 08 ஆம் திகதி காலை 06 மணியளவில் 1990 அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டியில் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 10.30 மணிவரை நானும் சின்னம்மாவும் வைத்தியசாலையில் இருந்துவிட்டே வந்தோம் அதன் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்று விட்டதாக அறிவித்தனர்.

எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பியோட அவசியம் இல்லை எனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என உருக்கமாக மூத்த மகன் இளங்கோவன் அபிநாத் கோட்டுக்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பொலிஸ் சாஜன்ட் இளங்கோவன் நோயுற்ற நிலையில் பயம் காரணமாக நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020