மீன்பிடிக்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த அனர்த்தம் : மயிரிழையில் தப்பிய மகன்
Fishing
Weather
Floods In Sri Lanka
By Jaso
சீரற்ற காலநிலையிலும் நேற்று (27ம் திகதி) யான் ஓயா முகத்துவாரத்திற்கு அருகில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் இருவரும் படகு கவிழ்ந்த நிலையில் தந்தை காணாமல் போனதுடன் மகன் தப்பித்து நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
தக்வாநகர் புல்முட் பிரிவு இலக்கம் 1 இல் வசிக்கும் அகமது லெப்பை அப்துல் முபாரக் (58) என்ற நபரே காணாமல் போயுள்ளார்.
காவல்துறை விசாரணை
இது தொடர்பாக விபத்தில் இருந்து தப்பிய காணாமல் போனவரின் மகன் முபாரக் ஜாகிர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த நாட்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்