தலகல ஓயா ஆற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka
By Raghav Jan 25, 2025 02:23 PM GMT
Report

நுவரெலியா (Nuwara Eliya)- தலகல ஓயா ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்றைய தினம் (25.01.2025) மீட்கப்பட்டுள்ளது.

ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் உள்ளீர்க்கப்பட்ட தமிழரசுக்கட்சி!

புதிய அரசியலமைப்பு விடயத்தில் உள்ளீர்க்கப்பட்ட தமிழரசுக்கட்சி!

சடலம் மீட்பு

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கிடந்ததை அவதானித்த மக்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

தலகல ஓயா ஆற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு! | Father Of Three Dies In Motorcycle Accident

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளொன்றும் அவர், அணிந்திருந்த தலைக்கவசமும் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயனைப்பு பிரிவினருக்கு அறிவித்து தேடுதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்றைய தினம் சனிக்கிழமை (25.01.2025) விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் உயிரிழந்தவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான தகவல்

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான தகவல்

மேலதிக விசாரணை

இதனை தொடர்ந்து காவல்துறைக்கு இது தொடர்பில் அறிவித்ததை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தலகல ஓயா ஆற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு! | Father Of Three Dies In Motorcycle Accident

பின்னர், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு பின்னர் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், நுவரெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026