மதுபோதையில் சாரத்தியம்! இரு பிள்ளைகளின் தந்தை பலி
இலங்கை போக்குவரத்து சபையின் திருத்தப்பணி சேவை பேருந்து மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த சரத்குமார பியதாஸ (வயது-68) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நாவலப்பிட்டியில் இருந்து கினிகத்தேனை பகுதிக்கு வந்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான திருத்தப்பணி சேவை பேருந்து மோதித்தள்ளியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து
தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்காது தலைமறைவாகியுள்ளார்.
படுகாயமடைந்தவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலைமறைவாகியிருந்த பேருந்து சாரதியை நாவலப்பிட்டிய போக்குவத்து காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.