மகள் மீது திரவகத்தை வீசி தந்தை செய்த கொடூர செயல்...!
தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் திராவகத்தை ஊற்றிய கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புலத்சிங்கள காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
தந்தையின் செயல்

சந்தேகநபரான தந்தை அடிக்கடி மதுபானம் அருந்துபவர் எனவும், மது அருந்திவிட்டு வந்து மகள் மற்றும் குடும்பத்தினரை அடிக்கடி துன்புறுத்துவதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த 25 வயதுடைய பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் எனவும் கூறப்படுகின்றது.
சந்தேகநபரான தந்தை புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், அங்கிருந்தே குறித்த திரவகப்போத்தலை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.