மூன்று வயது குழந்தைக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்த தந்தை கைது
தனது மூன்று வயது குழந்தைக்கு உணவு கொடுக்காமல் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் கரந்தெனிய அனுருத்தகமவில் வைத்து நேற்று (24) இரவு விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த காணொளி அவருக்கு காட்டுவதற்காக எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பணம் அனுப்பாததால் சித்திரவதை
வெளிநாட்டில் இருக்கும் மனைவி தனது தாயாருக்கு பணம் அனுப்புவதாலும் கணவருக்கு பணம் அனுப்பாததாலும் சந்தேக நபர் இந்த காணொளியை மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் அனுப்பிய இந்த காணொளியை அவரது மனைவி தனது மூன்று வயது குழந்தையை காப்பாற்றுமாறு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
சந்தேகநபர் கைது
சமூக வலைத்தளங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரான தந்தை இந்த குழந்தையை சித்திரவதை செய்வதாக பிரதேசவாசிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
