மகள்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையர்கள் கைது..!
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Sumithiran
பதின்ம வயது சிறுமிகளான தமது மகள்களை வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தையர்களான சிறிலங்கா இராணுவ சிப்பாய் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது நான்கு வயது மகளை வன்புணர்விற்கு உட்படுத்திய 32 வயதான சிறிலங்கா இராணுவ சிப்பாய் தொடங்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த

அதேபோன்று தனது பதின்மூன்று வயது மகளை வன்புணர்வு செய்த மெதிரிகிரிய நகரில் வசிக்கும் 38 வயதான தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.