இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கலா?
சில நாடுகளுக்குச் செல்வதாயின் சினோபோர்ம், அஸ்ட்ராசெனிகா மற்றும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் இளைஞர்கள் மத்தியில் அச்சம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந்தப் பிரச்சினையை எமது பக்கத்தில் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்போம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்ளாது சில நாடுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. எனினும், படிப்படியாக நாடுகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசிகளை ஏற்றுக் கொண்டால் அனைத்து நாடுகளும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வர வேண்டியிருக்கும்.
இருந்தபோதும் இந்தப் பிரச்சினையை எமது பக்கத்தில் தீர்ப்பதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுப்போம் என்றார்.