அமெரிக்காவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
அமெரிக்காவில் (USA) நடுவானில் பறக்கும் போது ஃபெடெக்ஸ் (FedEx) சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீ பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (01) புறப்பட்ட ஃபெடெக்ஸ் சரக்கு விமானம் (Boeing 767, flight FX3609), பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ பற்றியது.
இந்தியானாபோலிஸ்(Indianapolis) நோக்கிச் சென்ற குறித்த போயிங் 767 விமானம் (விமான எண் FX3609) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இயந்திரத்தில் பெரும் சேதம்
நெவார்க்கிலிருந்து இந்தியானாபோலிஸ் நோக்கிச் சென்ற விமானம், பறவை மோதியதால் இயந்திரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பிடித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
FedEx Plane Makes Emergency Landing in the U.S. Due to Engine Fire – NYT
— NEXTA (@nexta_tv) March 1, 2025
A FedEx cargo plane was en route from Newark to Indianapolis when a bird struck one of its engines. The Boeing 767made an emergency landing, and no one was injured. pic.twitter.com/oYt36oP5Sy
இந்த நிலையில் விமான ஊழியர்கள் திறமையாக செயற்பட்டு அவசர தரையிறக்கம் செய்ததால் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேவேளை எப.ஏ.ஏ (FAA) மற்றும் யு.எஸ்.டி.ஏ (USDA) அறிக்கைகளின்படி, இதுபோன்ற சம்பவங்களால் விமான நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
