தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்

Sri Lanka Police Mannar Vavuniya Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Aug 27, 2024 04:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா (Vavuniya) - மன்னார் (Mannar) வீதியில் நேற்று (26.08.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் (Nelukkulam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வெளியாகியுள்ள தகவல்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வெளியாகியுள்ள தகவல்

வண்டியிலிருந்து குதித்த வைத்தியர்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்டுள்ளது.

அப்போது நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான அவசர அறிவித்தல்

புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு வெளியான அவசர அறிவித்தல்

சாரதி மீது தாக்குதல்

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறைக்கப்பட உள்ள கட்டணங்கள்: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

குறைக்கப்பட உள்ள கட்டணங்கள்: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

மேலதிக விசாரணை

இந்நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025