தலிபான்களை பேட்டி எடுத்த பெண் செய்தியாளர் நாட்டை விட்டு தப்பியோட்டம்
afghanistan
female journalist
flees country
By Sumithiran
ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் கைப்பறிய சில நாட்களுக்குப் பின்னர் அவர்களை பேட்டியெடுத்த ரோலோ நியூஸின் தொகுப்பாளரான பெஹேஷ்டா ஆர்கண்ட், என்ற பெண் செய்தியாளர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் தலிபான்களை பேட்டி எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்ததுடன் அந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது.
எனினும் பேட்டியெடுத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
ஆர்காண்ட், பிபிசியின் கிறிஸ்டியன் பரேசரிடம் தனது நாட்டின் எதிர்காலம் குறித்தும் தனக்குள்ள அச்சங்கள் குறித்தும் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.