யாழில் கைதான பெண் சட்டத்தரணி - வடக்கில் வெடித்த போராட்டம்

Jaffna SL Protest Sri Lanka Police Investigation Court of Appeal of Sri Lanka
By Thulsi Oct 07, 2025 08:37 AM GMT
Report

புதிய இணைப்பு

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை 

யாழ். மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (07) கவனயீர்ப்பொன்றை திருகோணமலை நீதிமன்றத்தின் முன்னால் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கைதான பெண் சட்டத்தரணி - வடக்கில் வெடித்த போராட்டம் | Female Lawyer Arrested In Jaffna Lowers Protest

புதிய நீதி முறை பின்பற்றாது காவல்துறையினரின் அராஜகத்தை கண்டிக்கிறோம் இவ் அத்துமீறிய கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது ஊடகங்களுக்கு சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் நேற்று முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றின் உத்தரவு! வெடிக்கவுள்ள போராட்டம்

யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றின் உத்தரவு! வெடிக்கவுள்ள போராட்டம்

வெளிநாட்டு பயணத்தடை

பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் கைதான பெண் சட்டத்தரணி - வடக்கில் வெடித்த போராட்டம் | Female Lawyer Arrested In Jaffna Lowers Protest

குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது.

இந்நிலையில் தேடுதலுக்கான நீதிமன்ற கட்டளை இன்றி குறித்த பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று தமது சட்டத்தரணிகள் கடமைகளுக்குச் செல்லாது, எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011