தொடருந்து மோதியதில் பெண் உப லெப்டினன்ட் பலி
சிறிலங்கா இராணுவத்தில் கடமையாற்றிய பெண் உப லெப்டினன்ட் ஒருவர் கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணித்த விரைவு தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, இன்று (07) காலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தில் சப்-லெப்டினன்டாக இணைந்து கொண்டதாகவும் கடந்த 29 ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழப்பு
அதன்படி, கடந்த 4ஆம் திகதி ஹிகுராக்கொட முகாமுக்குச் சென்று சீருடைகளை பெற்றுக் கொண்டு மறுநாள் தியத்தலாவ முகாமில்பரீட்சை ஒன்றுக்கு தோற்றியுள்ளார்.
பரீட்சையை முடித்துக் கொண்டு கணேமுல்லையில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு வந்து வீடு திரும்பிய போது காலை 7 மணியளவில் தொடருந்தில் அடிபட்டு இடுப்பு பகுதியில் கால்கள் துண்டிக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
இந்த நிலையில், ஹிகுராக்கொட இராணுவ முகாமில் பணியாற்றிய மீரிகம லிந்தர பமுனுவத்த பிரதேசத்தை சேர்ந்த நிஷ்மி ஹஸார கமகே என்ற 23 வயதுடைய திருமணமாகாத யுவதியே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |