அடிவருடிகளுக்கே கோட்டாபய அரசாங்கத்தில் இடம்! சஜித் கடும் தாக்கு
அரசாங்கத்திற்குள் அடிவருடிகளுக்கே இடமளிக்கப்படுவதாகவும் அறிவு ஜீவிகளுக்கு தற்போது இடமில்லை எனவும் அந்த இடம் துதிபாடுவோருக்கு கிடைப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விவசாயிகளுக்கு பசளையை இலவசமாக வழங்குவதாக அன்று வாக்குறுதி வழங்கியது. விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்குவது எப்படி இருந்தாலும் விவசாயிகளின் நிலங்களும் தற்போது இல்லாமல் போயுள்ளன.
தரமற்ற உடன்படிக்கைகளை செய்து, தரமற்ற பசளைகளை இறக்குமதி செய்து, அரசாங்கம் விவசாயிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தரிசு நிலைத்தை பயிர் செய்யும் நிலமாக மாற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், சௌபாக்கியத்திற்கு பதிலாக அசௌபாக்கியத்தை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கூடுதல் செய்திகளுயுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,