உரத் தட்டுப்பாடு : சிதைவடையும் மக்களின் வாழ்வாதாரம்!
இந்த அரசாங்கம் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் சென்றுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான தேசிய சம்மேளனத்தின் காலி மாவட்ட அமைப்பாளர் டீ.கே. ஜயசுந்தர (D.K .Jayasundera) தெரிவித்துள்ளார்.
உரத் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் தேங்கியுள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், முன்னைய வருடங்களை விட கடந்த வருடம் குறைந்தளவிலான தேயிலை விளைச்சலே கிடைக்கப் பெற்றது.
இதன் அனைத்து பிரதிபலன்களும் அரசாங்கத்தின் அமைச்சரவை ஆசனத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படப்போவதில்லை. அனைத்து பிரதிபலன்களும் இறுதியாகத் தேயிலையை உற்பத்தி செய்யும் சாதாரண தொழிலாளருக்கே வரப்போகின்றது.
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுமே, இதனால் பாதிப்படைவர். இது சாதாரண விடயமல்ல. மக்களின் வாழ்வாதாரம் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.