உர விலைகள் அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் ( K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு பெரும் நட்டம்
பொதுவான பிரச்சினையைத் தாண்டி, சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை ஆகாமல் குப்பையில் வீசப்படுவதாக நிலையத் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மஹவெலி ‘H’ மண்டலம், ராஜாங்கனை, எப்பாவெல, கட்டியாவ, நொச்சியகம போன்ற பகுதிகளில் இருந்து வாழைப்பழங்களை கொண்டுவரும் விவசாயிகள், சந்தை தேவை குறைவானதால் தங்களது அறுவடைகள் பெரிதும் வீணாகி வருவதால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சந்தையில் தேவை இல்லாததால், மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் வாழைப்பழங்களில் பெரும்பகுதி விற்பனை ஆகாமல் கழிவாக வீசப்படுவதாகவும், இது விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
