நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார பெரும் திருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார பெரும் திருவிழா இன்று (21)சிறப்பாக ஆரம்பமாகியது.
இன்றிலிருந்து 11 தினங்கள் இடம்பெறவுள்ள அலங்கார பெரும் திருவிழாவில் 5ம் நாளான 25/09/2026 வெள்ளிக்கிழமை நாகதம்பிரான் வெளிவீதி உலா வருகைதருவார்.
திருவிழா நிகழ்வுகள்
6ம் நாள் 26/09/2026 சனிக்கிழமை பாம்புத் திருவிழாவும், 7ம் நாள் 27/09/2026 ஞாயிற்றுக்கிழமை கப்பல் திருவிழாவும், 8ம் நாள் 28/09/2026 திங்கள்கிழமை வேட்டைத் திருவிழாவும், 9ம் நாள் 29/09/2026 செவ்வாய்க்கிழமை சப்பறத் திருவிழாவும், 10 நாள் 30/09/2026 புதன்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், 11ம் நாள் 01/10/2026 கேணித் தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று 02/10/2026 வைரவர் மடையுடன் அலங்காரத் திருவிழா நிறைவடையவுள்ளது.

கிரியைகள் பிரணவ சர்மா தலைமையில் சிவ சண்முக குருக்கள், மற்றும் பிரசாத் சர்மா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ஓம பூசை, வசந்த மண்டப பூசை ஆகியவற்றை தொடர்ந்து நாக தம்பிரான் உள் வீதி வலம்வந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |