அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க தீர்மானம்
Sri Lanka
Government Of Sri Lanka
By Dharu
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, பண்டிகை முற்பணமான ரூபா 10,000 ரூபாவினை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு
இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப, 4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக்கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, ரூபா 250,000இலிருந்து ரூபா 400,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முற்பணங்கள் குறுகிய காலத்திற்குள் இடையூறின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக, அரச ஊழியரக்ளின் முற்பணக் கணக்கு வரையறைக்கென ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |