இலங்கையில் பாகிஸ்தானை களம் இறக்குகிறதா சீனா?

China Sri Lanka Pakistan
By Vasanth Jan 17, 2021 11:33 AM GMT
Report

சீனா இலங்கை விடயத்தை கையாள தனது நட்பு நாடான பாகிஸ்தானை களம் இறக்குகிறதா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் ஊடாக உலகை முடக்கி தனது செயற்பாட்டு வலயத்திற்குள் கொண்டுவந்துள்ள சீனா, உலக வல்லரசு நாடுகளையெல்லாம் தனது நிகழ்சி நிரலின் கீழ் செயற்பட வைத்துள்ளது.

லொக்டவுன், தனிமைப்படுத்தல், பி.சி.ஆர், மாவட்ட முடக்கம்,மாகாண முடக்கம், நாட்டை முடக்குதல், முக கவசம், தொற்று நீக்கிகள் என ஒரு முறைமையை உருவாக்கி அதன்படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் சீனா உருவாக்கியுள்ளது. ஆக மொத்தத்தில் விரும்பியோ விரும்பாமலோ - தெரிந்தோ தெரியாமலோ உலகமே சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிகொண்டு இருக்கிறது. அவ்வாறு இயங்க வேண்டிய கட்டாயத்தை சீனா உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக சீனா பாரிய வளர்ச்சி அடைந்து வருவதுடன் தனக்கு பொருளாதார ரீதியாக போட்டியாக இருந்த நாடுகளை எல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது. இந் நிலையில் இலங்கையை குட்டிச் சீனாவாக மாற்றும் முயற்சியில் தற்போது சீனா மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. இதுவரை இலங்கையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்திய சீனா தற்போது தனது நட்பு நாடான பாகிஸ்தானை களம் இறக்கியுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் இலங்கையில் கால் ஊன்றி தாராளமாக செயற்பட்டு வரும் நிலையில், தற்போது இராச்சிய அரசியல் ரீதியாக இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானை சீனா களம் இறக்கியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது தொடர்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள பாரிய எதிர்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தானை ஒரு சமாதான தூதுவராக இலங்கைக்கு அனுப்ப சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

முஸ்லிம் ஜனாசா எரிப்பு விவகாரம், இலங்கை அரசுக்கு எதிராக முஸ்லிம் மக்களை ஒன்று பட வைத்துள்ளதுடன், பிளவு பட்டிருந்த தமிழ் முஸ்லிம் உறவை மீள கட்டியெழுப்புவதற்கும் வழியமைத்து கொடுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள முஸ்லிம் மக்களின் இந்த எதிர்ப்பலை சர்வதேச ரீதியில் முஸ்லிம் நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீதான அதிர்ப்தியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்த விடயம் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் போது அதற்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் கையுயர்த்த கூடும் என்பதால் இந்த விடயத்தை இலங்கைக்கு ஆதரவாக மாற்றுவதற்கு சீனா பாகிஸ்தானை நேரடியாக களம் இறக்கவுள்ளது. இதற்காக மிக விரைவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களை சந்தித்து இந்த விடயத்தில் இலங்கை அரசுடன் இணங்கிச் செல்லுமாறு அவர் அறிவுரை வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் வெற்றி! இலங்கையை சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தும் சீனாவின் திட்டம் வெற்றியளித்துள்ளது. சர்வதேச ரீதியாக இலங்கை மீதான எதிர்ப்புகளை உருவாக்கி சர்வதேச ரீதியாக இலங்கையை தனிமைப்படுத்தினால் மாத்திரமே இலங்கை தொடர்ந்தும் சீனாவின் காலடியில் கிடக்கும் என்ற சீனாவின் வியூகம் வெற்றியளித்துள்ளது.

இந்திய, அமெரிக்க நாடுகளை புறந்தள்ளி இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையை தனிமைப்படுத்தி தனது காலடிக்கு சீனா கொண்டுவந்துள்ளது. தற்போது இலங்கையில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கால் ஊன்றி தாராளமாக செயற்பட்டு வருகிறது. தற்போது சீனாவின் கம்யூனிஸ்டு கொள்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நாடாக இலங்கை மாறி வருகிறது.

இலங்கையின் சமூக,பொருளாதார, அரசியல் ரீதியான கொள்கைகளில் சீன கம்யூனிஸம் அதிக தாக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளன. இதனால் எதிர் காலத்தில் சிறுபான்மை இன மக்கள் மீதான அடுக்கு முறைகள், பேரினவாத செயற்பாடுகள் அதிகரிக்க கூடும் என்பதுடன். இலங்கையில் ஒரு இராணுவ ஆட்சிக்குரிய அரசாங்கமே கட்டியெழுப்பப்படும் என்பதே உண்மை. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்