வெளிநாடொன்றில் இன்று அதிகாலை சிறையில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து - 41 கைதிகள் உடல் கருகி பலி
prison
fire
indonesia
inmate kill
By Jaso
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே உள்ள சிறையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயிரத்து 225 கைதிகள் மட்டுமே அடைக்க கட்டப்பட்ட இந்த சிறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட பிளாக்கில் 122 தண்டனை கைதிகள் இருந்ததாகவும், அவர்களில் 41 பேர் வரை இறந்திருக்கலாம் எனவும், 39 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்தோனேசிய சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில மணி நேரங்களில் தீ அணைக்கப்பட்டு, காயமடைந்த கைதிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து தப்பிச் செல்லவும், வன்முறைகளில் ஈடுபடவும் இந்தோனேசிய சிறைகளில் அடிக்கடி தீ வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.