கால்பந்து போட்டியில் வைரலான இந்திய துடுப்பாட்ட வீரர் தோனி!
2022 க்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் தோனியின் ஜெஸியை பிடித்து இந்தியர் ஒருவர் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக பரவியுள்ளது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
சென்னை அணி தலைவர்
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரேசில் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.
இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி தலைவர் டோனியின் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.