கடந்த 14 வருடத்தில் ஒரு மாவட்டத்தில் மூடப்பட்ட 15 பாடசாலைகள்
அநுராதபுரம்(anuradhapura) மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த(susil premjayantha) இன்று (4)நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் வருகை தராத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார (Rohana Bandara)கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூடப்பட்ட பாடசாலைகளில்
மூடப்பட்ட பாடசாலைகளில் சில பிரதேச செயலகங்கள் மற்றும் மாணவர் நாணல் படை போன்ற அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இப்பாடசாலைகளை கிளஸ்டர் பாடசாலை முறையின் கீழ் மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பள்ளிகளுக்கு சில வகுப்பறைகளை வழங்க
முன்பள்ளிகளுக்கு சில வகுப்பறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |