அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
அரசியலமைப்பு பேரவைக்கு இறுதி நியமனம் இதுவரை இடம்பெறாமை தொடர்பாக யாருக்கும் யாரையும் குற்றம் சுமத்த முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(24) அரசியலமைப்பு பேரவைக்கு அமைச்சர் சித்தார்த்தனின் பெயரை இதுவரை நியமிக்காமல் இருப்பது தொடர்பாக அதிபர் வியாக்கிழமை (23) சபையில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டதற்கு அமையவே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு பேரவைக்கான இறுதி நியமனம்
“அரசியலமைப்பு பேரவைக்கான இறுதி நியமனம் தொடர்பாக அதிபருக்கு தெளிவுபடுத்தி எழுத்துமூலம் அறிவிப்பேன்.

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நியமனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என்றே சட்டமா அதிபரின் ஆலாலோசனையும் இருந்தது.
இதனை மீறி செயற்பட எங்களுக்கு சட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அதனால் இது தொடர்பாக அதிபருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன்.
அவ்வாறு இல்லாவிட்டால், இந்த பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் அரசியலமைபில் இருக்கும் அந்த உறுப்புரையை மாற்ற வேண்டும். அதனால் அரசியலமைப்பு பேரவைக்கு இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டவரை இதுவரை நியமிக்கவில்லை என யாரையும் குற்றம் சுமத்த, எவருக்கும் முடியாது.
அரசியலமைப்பில் இடம்பெற்ற குறைபாடு காரணமாகவே இந்த விடயம் இடம்பெறாமல் இருக்கிறது
இலஞ்ச ஊழல் எதிர்ப்பு சட்டம்
அத்துடன் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு சட்டத்திலும் எந்த தாமதமும் இல்லை.

அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. சட்டத்தில் சிறிய திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கே சற்று தாமதம் இருந்தது.
தற்போது அந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்துக்குள் இதற்னான நியமனங்கள் அனைத்தும் பூரணப்படுத்தப்படும்.
அத்துடன் இதற்கான நியமனங்களுக்கு நபர்களை தெரிவு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியமும் சில யோசனைகளை தெரிவித்திருக்கிறது.
அதனால் இந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி நாடாளுமன்றத்துக்கு அந்த திருத்தங்களை முன்வைத்திருக்கிறோம்.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கும் இந்த . நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவோம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்