மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முக்கியஸ்தர்கள்
மறைந்த மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு (Rajanayagam Bharathi) ஊடகத் துறை சார்ந்தவர்களுடன் பல அரசியல் தரப்பினரும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்றையதினம் (13) அன்னாரின் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடகத் துறைசார் தோழர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்திவருகின்றனர்.
அஞ்சலி உரைகள்
இதன்போது பாரதியின் அழிக்கப்பட முடியாத வரலாற்று தடங்களை அஞ்சலி உரைகளின் மூலம் எடுத்துக் கூறி நினைவு கூர்ந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலக்குறைவினால் கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/df3e5583-a8e0-4e6f-8e5e-46981c3dda63/25-67ada0259bc10.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ba4177ed-9207-4ef0-9bf3-8b6d4d567e2c/25-67ada02634d94.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/04997a41-0134-40b6-bd60-4bb5b67e8ca4/25-67ada026c70b1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/df1a6b4e-f336-49db-b01b-b0c32737db52/25-67ada0275df17.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a879dd62-e6a4-4198-8db5-01801530225b/25-67ada0288c45f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/31e5ee76-a83c-4930-9bcc-c02e44e7b468/25-67ada0292072f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e54df9c3-d980-4004-b5ce-d67ad8d4792a/25-67ada029ae16f.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)