ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்த நிதி அமைச்சர்!
People
Basil Rajapaksa
SLPP
SriLanka
By Chanakyan
எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுசன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை வெல்வதற்கு எம்மொடு இணைந்து ஆதரவாளர்களுக்கும் போராடுவதற்கு முன்வர வேண்டும்.
அத்தோடு, கட்சியை கட்டியெழுப்புவதற்கு உதவி புரிந்த கட்சியின் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.