திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

Douglas Devananda Shanakiyan Rasamanickam Financial crisis Election Sri Lankan local elections 2023
By Dharu Mar 08, 2023 06:34 AM GMT
Report

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செயற்படாவிட்டால் திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(7) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் பொருளாதார நிலைமை,பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் உரையாற்றினார். 2500 ரூபாவினால் ஒரு குடும்பம் தமது ஒருமாத செலவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கருத்து

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன் | Finance Ministry Arrest Police Doller Cresis Sl

ஆகவே இவரின் பொருளாதார மதிப்பீட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெருமையாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் நிலைமை தலைகீழாக உள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவதற்கு முன்னர் தேவையான மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடப்படுகிறது. தமது பிள்ளைகளின் மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு தாய் தனது இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது.

ஆகவே பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன் | Finance Ministry Arrest Police Doller Cresis Sl

வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிடும் அரசாங்கம், கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 158 பில்லியன் ரூபாவை தேசிய மட்டத்தில் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் வரி அதிகரிப்பு கொள்கை ஊடாக கடனை மீள் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கையினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் விலையேற்றத்தினால் 4 இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு அரசாங்கம் தடையேற்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பதை தடுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசாங்கத்தின் கைகூலி

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன் | Finance Ministry Arrest Police Doller Cresis Sl

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய திறைச்சேரியின் செயலாளர் செயற்பட வேண்டும், இல்லாவிடின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அமைய சிறை செல்ல நேரிடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள்.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம்,கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக் கூறுவதற்கும் அருவருப்பாக இருக்கின்றது.

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்குவதுதான் அவருடைய பொறுப்பாக காணப்படுகின்றது. அவர் இந்த அரசாங்கத்தின் கைகூலியாக இருக்கின்றார். அவர் வட பகுதியிலுள்ள மீனவர்கள் குறித்து சிந்தித்து பார்க்காமல் அவர் என்ன செய்கின்றார்.

இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினையே அவர் முன்னெடுக்கின்றார். இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக அரசியல்வாதிகளையும், தமிழக மக்களையும் எங்களுக்கு எதிரானவர்களாக மாற்றும் நோக்கிலேயே அவர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

ஆளுநரின் மோசமான செயற்பாடு

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன் | Finance Ministry Arrest Police Doller Cresis Sl

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டும். எங்களுடைய பொருளாதாரத்தை முழுமையாக அழித்தது இந்த அரசாங்கம்.

விவசாயிகளுக்கு 100 ரூபாய்க்கு நெல்லை கொள்வனவு செய்வதாக அதிபர் கூறினார். இன்று அறுவடை முடிந்தும் 35 ரூபாய்க்கும் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரின் மிக மோசமான செயற்பாடுகள் காரணமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினுடைய காணிகளில் குறிப்பாக மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் கால்நடைகள் சுடப்படுகின்றன.

காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். காவல்துறை ஆணைக்குழுவில் காவல்துறையினரின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கரடியனாறு காவல்துறை நிலைய பொறுப்பதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023