யாழில் விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி
ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதியுதவி
இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பெரதெனியாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening