சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசம் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

Anura Kumara Dissanayaka Colombo National Hospital Suresh Salley
By Sathangani Aug 22, 2026 04:48 AM GMT
Report

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் சுரேஷ் சலேயை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான விசேட மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு ஓகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சலேயின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய திருவிழாவில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர்...! யாழ் போதனாவில் அனுமதி

ஆலய திருவிழாவில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர்...! யாழ் போதனாவில் அனுமதி

தேசிய வைத்தியசாலையில் அனுமதி  

பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ICD எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசம் : அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Anura Not To Extend Suresh Sallays Detention Order

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சலேயிற்கு தொடர்ச்சியான விசேட மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய வைத்தியசாலையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சலேயின் மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.

அத்துடன், சலே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் துறை ஊழியர்களுக்கான தொடருந்து பருவச்சீட்டு : வெளியான அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான தொடருந்து பருவச்சீட்டு : வெளியான அறிவிப்பு

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025