யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோசடி!
வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதி ஒன்று வந்துள்ளதாகக் கூறி, நபர் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சந்தேகநகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி குறித்த பொதியை பெற்றுக்கொள்வதற்காக 305,000ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கைது
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடக்கு மாகாண கணினி குற்றங்கள் விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார்.

மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர், நேற்று (06) மாலை யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வட மாகாண கணினி குற்றங்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |