கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு!
கிளிநொச்சி - முரசுமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (21.08.2026) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குழந்தையும் அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
3 வயது குழந்தை பலி
இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது உழவு இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை, பின் சக்கரத்திற்குள் சிக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் உழவு இயந்திரத்தை இயக்கிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |