சுகாதார அமைச்சகத்தில் அனைத்து நிர்வாக ஊழியர்களுக்கும் கைரேகை கட்டாயம்!
எதிர்வரும் மாதம் தொடக்கம் அனைத்து தர சுகாதார அதிகாரிகளுக்கும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் அனைத்து பணியாளர் தர உத்தியோகத்தர்களும் அவர்களின் தினசரி வருகை மற்றும் புறப்பாட்டினை கைரேகை இயந்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் நேர கொடுப்பனவு
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, "இந்த புதிய நடவடிக்கையானது வருகைப் புத்தகத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது சுகாதார அமைச்சில் பணிபுரியும் மருத்துவ நிர்வாகிகள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்" என்றும் அவர் கூறினார்.
"இந்த புதிய நடவடிக்கையின் மூலம் உத்தியோகத்தர்களின் கூடுதல் கடமை மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளுக்கு எந்த அலுவலர்கள் தகுதியுடையவர்கள் என்பதை துல்லியமாக தீர்மானிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம் எழுந்த நிலையிலேயே மேற்கண்ட விடயம் கூறப்பட்டது.