முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய குழந்தையின் உயிரிழப்பு
Mullaitivu
Fire
By Vanan
முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் 6 மாத குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் சின்னையா சுறோமி என்ற இளம் தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த 22.02.2023 அன்று வீட்டில் குப்பி விளக்கு தவறி விழுந்ததில் குழந்தையின் உடலில் தீப்பற்றி தர்மபுரம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு சென்று, பின்னர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த குழந்தை நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தையின் உடல் இன்று (31) முல்லைத்தீவு இளங்கோபுரம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி