யாழில் பாரிய தீ விபத்து! சம்பவ இடத்திலேயே சகோதரர்கள் இருவர் பலி (படங்கள்)
Sri Lanka Police
Sri Lanka Upcountry People
Jaffna
Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாணம் - பருத்தித்துறைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை முனைப் பகுதியில் உள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையிலேயே இன்று (02) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவர் பலி
குறித்த விபத்தில் மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக யாழில் தீ விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி