யாழில் திடீரென பற்றி எரிந்த புடவை கடை - பல லட்சம் பெறுமதியான புடவைகள் நாசம்
Jaffna
Accident
By pavan
யாழ். வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு (27.02.2023) இடம்பெற்றுள்ளது.
திடீரென தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
அனைத்து பொருட்களும் நாசம்
தீயை அணைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தீ கட்டுப்பாட்டுக்குள் வர கால தாமதமாகியதால் கடைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்