கொழும்பில் பற்றி எரிந்த கனரக வாகனம் - உள்ளிருந்த பொருட்கள் எரிந்து நாசம்
Sri Lanka Police
Sri Lanka
Accident
By pavan
கொழும்பில் இருந்து காலிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று தீப்பிடித்துள்ளது.
இந்த சம்பவம் காலி, கலேகன பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தீயினால் கொள்கலனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானதுடன், காலி தீயணைப்பு பிரிவினர் சென்று தீயை அணைத்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் காலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.