வாகன உதிரிப்பாக உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல்!
Fire
Fiber
Manufacturing
Piliyantalai
By MKkamshan
பிலியந்தலையில் வாகன உதிரிப்பாக உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை, தொலே மயானப் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிட வீடொன்றில் இயங்கிவந்த இழை (ஃபைபர்) வாகன உதிரிப்பாக உற்பத்தி நிலையமொன்றில் தீப்பரவலில் குறித்த கட்டிடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
இந்நிலையில் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஒரு மணித்தியாலத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சம்பவத்தினால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீயினால் பெருமளவிலான வாகன ஃபைபர் பாகங்கள் மற்றும் பல தளபாடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேல் தளம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி