கஹவத்தை ஆதார மருத்துவமனையில் அதிகாலையில் திடீர் தீ விபத்து
கஹவத்தை ஆதார மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (17.11.2026) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குறித்த மருத்துவமனை கட்டிடம் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள்
பழைய நோயாளர் விடுதியைக் கொண்ட குறித்த கட்டிடம், பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டிருந்ததுடன், அதில் பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இரத்தினபுரி நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
மருத்துவமனை கட்டிடம் முன்னர் நோயாளர்களுக்கான விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து நோயாளர் விடுதிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவமனை ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |