ஹட்டன் நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்
Sri Lanka Police
Sri Lanka
Fire
Hatton
By Raghav
ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) பிற்பகல் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும் ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக ஹட்டன் கிளை வீதியில் வாகன போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த ஹட்டன் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி