நாட்டில் உச்சத்தை தொட்ட பட்டாசு விற்பனை!
நாட்டில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பட்டாசு விற்பனை 90 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வானவெடி மற்றும் விசில் பட்டாசு போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பட்டாசு
அத்தோடு கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் பட்டாசு வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விபத்துக்களை தவிர்த்து கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |