காவல்துறையினருக்கு வழங்கப்படவுள்ள வெகுமதி... வெளியானது காரணம்!
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (13) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு வெகுமதியாக 5000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அதிகாரிகளை ஊக்குவிக்க
"குடிபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரைக் கைது செய்ய பல வாகனங்களைச் சோதனை செய்ய வேண்டியுள்ளதனால் அதற்காக கடமையில் இருக்கும் அதிகாரிகளை ஊக்குவிப்பதற்காகவே இந்த வெகுமதி வழங்கப்படவுள்ளது..
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட காவல்துறை குழுக்கள் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, அதுமாத்திரமன்றி விசேட மோட்டார் சைக்கிள் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடுமையான சட்டம்
குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிய அனைத்து காவல் நிலையங்களுக்கும் குறைந்தது 150,000 ப்ரீதலைசர் (breathalyzer) பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும், போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |