வீதியில் திரிந்த சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..! மண்ணிலிருந்து கிடைத்த பழமையான பொக்கிஷம்
பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் ஒருவன் 2,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுவன் ரோவன் தனது செல்லப்பிராணியை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூமியிலிருந்து அவருக்கு ஒரு அறிய பொக்கிஷம் கிடைத்துள்ளது.
அதை அந்த சிறுவன் தனது தாயிடம் கொடுத்துள்ளார். அவரது தாய் அதை எதோ குப்பை என நினைத்து குப்பை தொட்டியில் வீச நினைத்துள்ளார். அப்போதுதான் அது விலைமதிப்பில்லாத பொருள் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
தங்க வளையல்
அது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு தங்க வளையல். அதனை சோதனை செய்து பார்த்ததில் அது கி.பி 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, சிறுவன் வளையலை எடுத்தபோது அது மண்ணால் மூடப்பட்டிருந்தது. ஆனால் சிறுவன் அதை தங்கமாக இருக்கலாம் என நம்பி வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்த ரோவன், “எனக்கு இது சாதாரன விஷயம். ஏனென்றால் நான் இதுபோல பல பொருட்களை பூமியிலிருந்து எடுத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
You May Like This Video
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |