திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி- முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
fire
death
sri Lanka
three wheel
By Kalaimathy
மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக மஹவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியிலிருந் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு உயிரிழந்தவர் கொன்வெவ பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.