வெளிநாடொன்றில் நள்ளிரவு நேரம் பற்றிய தீ :200 வீடுகள் முற்றாக அழிந்தன : நிர்க்கதியான ஏழை மக்கள்
Malaysia
Fire
By Jaso
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் அழிந்துள்ளன.
இன்று (19) அதிகாலை 1.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, நாடற்ற மக்கள் மற்றும் பழங்குடியினர் குழுக்கள் உட்பட, நாட்டின் மிகவும் ஏழ்மையான சமூகங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகள் மற்றும் தற்காலிக மீள்குடியேற்றத்தை வழங்குவதற்காக, மத்திய அரசு சபா அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.

இந்தத் தீ விபத்தில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 2 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி