வவுனியாவில் தீ விபத்து - பற்றி எரிந்த உணவகம்
வவுனியா நகரில் உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகர் - கண்டி வீதியில் இரண்டாம் குறுக்குத்தெரு சந்திக்கு எதிரே இருந்த லக்சனா உணவகம் இன்று (19) இரவு 8.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம்

அந்த உணவகத்தில் கடமையாற்றுபவர் இதனை அவதானித்த நிலையில், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அங்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்த போதும் உணவகம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இருப்பினும் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது.

இத் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.