துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு வெளியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Ministry of Defense Sri Lanka
By Sumithiran
இந்த ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை இன்னும் புதுப்பிக்காதவர்களுக்கு பெப்ரவரி 10 வரை மேலதிக கால அவகாசம் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க துப்பாக்கி உரிமதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலம் ஜனவரி 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
அதன்படி, துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் விதிகளின்படி, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன் துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்காத அனைத்து துப்பாக்கி உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி