புத்தாண்டு கால கொண்டாட்டங்கள்! பொதுமக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை
By Dilakshan
புத்தாண்டு காலத்தில் பட்டாசு தொடர்பான விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் சமூக வைத்தியரும், விபத்துத் தடுப்புப் பிரிவின் தலைவருமான வைத்தியர் சமிதா சிறிதுங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
விபத்து இல்லாத பண்டிகை
அதன்போது, பெரியவர்களின் மேற்பார்வையின்றி சிறுவர்களை பட்டாசுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தப் புத்தாண்டைப் பொறுப்புடன் கொண்டாடி, விபத்து இல்லாத பண்டிகைக் காலத்தை உறுதிசெய்யுமாறும் வைத்தியர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்