வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு - 32 வயதுடைய நபர் காயம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காலை 6.30 மணியளவில் உந்துருளியில் வந்த இருவர் திடீரென வீடொன்றிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்து திரும்பிய நபர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையிலிருந்து திரும்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
