மருத்துவ துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள புதிய கண்டுபிடிப்பு!
United States of America
Texas
Technology
By Aadhithya
உலகின் முதல் டைட்டானியத்தினால் ஆன செயற்கை இதயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை (The USA) சேர்ந்த "Bivacor" எனும் நிறுவனமே குறித்த செயற்கை இதயத்தை கண்டுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இதயம் செயலிழக்கும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு வேறொருவரின் இதயம் மாற்றப்படும் வரை இது ஒரு காப்புப் பிரதியாக செயல்படும் என கூறப்படுகின்றது.
இந்தநிலையில், டெக்சாஸ் மருத்துவ மையத்தில் ஒருவருக்கு இந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டதாக “டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்” (Texas Heart Institute) மற்றும் BiVACOR நிறுவனம் அறிவித்துள்ளன.
மேலும், உண்மையான இதயத்தை முழுமையாக மாற்ற இந்த செயற்கை இதயத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்