புற்றுநோயை அழிக்கும் பக்டீரியாக்கள்: ஆய்வில் வெளியான தகவல்!
பொதுவான சில பக்டீரியாக்கள் புற்றுநோய் கலங்களை அழிக்க செய்யும் திறன் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த வகையில், "சல்மொனெல்லா" (Salmonella) , "குளோஸ்ட்ரிடியம்" (Clostridium), "இஷெரிச்சியா கொலை" (Escherichia Coli) போன்ற பக்டீரியாக்கள் புற்றுநோய் கலங்களை அழிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பக்டீரியாக்கள் புற்றுநோய் பகுதிகளுக்கு சென்று, பல்வேறு நச்சுப்பொருட்களை உருவாக்குவதன் மூலம் அங்குள்ள கலங்களை தாக்கி அவற்றின் வளர்ச்சியை முடக்கி அவற்றை முழுமையாக அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எலி மாதிரிகள்
இது தொடர்பாக பல ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு குறிப்பாக எலி மாதிரி (mouse model) போன்றவற்றில் இவை சோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உதாரணமாக “பசில்லஸ் கலமேட்டே குவேரின்“ (BCG) எனும் பக்டீரியாவைப் பயன்படுத்தி தசை புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகதாக தெரியவந்துள்ளது.
எது எவ்வாறெனினும் இவ்வகையான பக்டீரியாக்களை பயன்படுத்தும் போது, அதன் வீரியம், நச்சுத்தன்மை போன்றவை சில நேரங்களில் பக்கவிளைவுகளையும் தோற்றுவிக்கக்கூடுமென கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |