உலக சாதனை படைத்து வரலாற்றை மாற்றிய விமானம்
Norway
South Africa
By Vanan
உலக வரலாற்றில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானமே இந்தச் சாதனையை படைத்திருக்கிறது.
40 மணி நேர பயணம்
கடந்த 15ஆம் திகதி அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை விமானிகள் தரையிறக்கியுள்ளனர்.
நோர்வே நாட்டிலிருந்து 45 விஞ்ஞானிகள் மற்றும் 12 தொன் பொருட்களுடன் புறப்பட்ட இந்த விமானம் தென்னாபிரிக்காவில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பியது.
பின்னர் சுமார் 40 மணி நேர பயணத்திற்கு பிறகு அண்டார்டிகாவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
இதன் மூலம் இனி அண்டார்டிகாவிலும் பயணிகள் விமானத்தை தரையிறக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 18 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்